இடிந்து விழும் நிலையில் மகளிர் சுகாதார வளாகம்... கவனிக்குமா நிர்வாகம்..?

ஊத்தங்கரை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இடிந்து விழும் நிலையில் மகளிர் சுகாதார வளாகம்... கவனிக்குமா நிர்வாகம்..?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில்  2004 -2005 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கட்டடம் ஆனது.

பழுதாகி மோசமான நிலையில் 2011 -12 ஆம் ஆண்டு   ஆம் ஆண்டு ரூபாய் 84 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைப்பு திட்டத்தின் கீழ் பராமரிப்பு செலவு செய்ததாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்றோ தற்பொழுது சுகாதார கட்டிடம் உள்ளே கழிவறை  கதவுகள்  பழுதடைந்து உடைந்தும் காணப்படுகின்றார். மேலும் சுவர்கள்,குடிநீர் தொட்டிகள், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் மோசமான நிலையில் உள்ளது.

இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த ரேவதி என்கிற பெண் கூறுகையில் :

எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் குழந்தைகள்,இந்த கழிப்பறை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஊத்தங்கரை நகர பகுதியை ஒட்டி உள்ளதால் எங்களுக்கு இந்த கழிவறையை தவிர வேறு எங்கும்  கழிப்பறை வசதி எதுவும் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கழிப்பறை வளாகத்தில் சீரான இரும்புக் கதவுகள் இல்லை.

ஜன்னல்கள் உடைந்த நிலையிலும் கட்டிடத்தின் சுவற்றில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவில் இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளது. மேலும் மகளிர் சுகாதார வளாகத்திற்கு தனி தண்ணீர் வசதி இல்லை. ஊர் பகுதிக்கு செல்லும் குடிநீர் இணைப்பில் இதற்கும் என தனி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தொட்டியில் போதிய அளவு தண்ணீர் இருப்பதில்லை. மேலும் பெண்கள் குழந்தைகள் இரவு நேரத்தில் இங்கு கழிப்பறை பயன்படுத்த வரும்பொழுது மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் பாம்புகள் விஷ பூச்சிகள் இருப்பதாக கூறுகின்றனர். ஆகையால் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் உடனடியாக காந்திநகர் பகுதியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை புனரமைத்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.