ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு...!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு...!

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்,  காக்கணாம்பாளையம் ஊராட்சி சிங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் டிரைவர். சாமிக்கண்ணு. இவரது மனைவி கோமதி(25)  இவர் நிறைமாத கர்பிணி ஆவார்.  

இந்த நிலையில் பிரசவத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை  காக்கணாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தனர். சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.  

அதனை தொடர்ந்து இன்று காலை குடும்ப கட்டுபாடு சிகிச்சைக்காக  ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இன்று காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். கோமதி ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக கருதிய ஆண்டிப்பனூர் மருத்துவர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் வரும் வழியில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதை தொடர்ந்து கோமதி இறந்த செய்தி அறிந்த அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் துணை இயக்குனர்  செந்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

மேலும் தவறு செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் மருத்துவ மனையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க   |"லிஸ்ட் ரெடி அறிவிப்பு எப்போது?? - தொண்டர்கள் வெயிட்டிங்...”