" தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறுக..." - எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம்.

" தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறுக..." - எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்களத்தில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் முகமது பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசிய பொதுச்செயலாளர் முகமது பாரூக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூட்டத்தினர் இடையே உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,...

தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக அவர்களை நசுக்கும் வகையில் நான்கு தொகுப்புகளாக ஒன்றிய அரசு பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்றும், அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் கோரினார். அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சலுகைகளையும் அடிப்படை ஊதியத்தையும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க    } கர்நாடக தேர்தலுக்கு பின் திடீர் திருப்பம்..! மல்லிகார்ஜுன கார்கே மீது அவதூறு வழக்கு...!

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை,சேமநல நிதி ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் எஸ் டி பி ஐ தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு,தொழிற்சங்க மாநில தலைவர் திண்டுக்கல் முகமது ஆசாத்,எஸ்டிபிஐ மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர மங்களம் பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


இதையும் படிக்க    }  கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதியில் மாற்றம்...!