தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயுமா?  'டிஜிபி' நாசர் என்ன சொல்கிறார்... ஜெயக்குமார் கிண்டல் 

'தி.மு.க அமைச்சர்கள் 22 பேர் மேல லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் மீது 'டிஜிபி' நாசர் நடவடிக்கை எடுப்பாரா?' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயுமா?  'டிஜிபி' நாசர் என்ன சொல்கிறார்... ஜெயக்குமார் கிண்டல் 

முன்னாள் அமைச்சர் வேலுமணியை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படும். அவர்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபித்துவிட்டு வெளியே வரட்டும்.

அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி சேர்ந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள் பதறுகின்றனர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் நாசருக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவு:

நாசர் எப்போ தமிழ்நாடு டி.ஜி.பி., ஆனாரு? இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ?

தி.மு. க அமைச்சர்கள் 22 பேர் மேல லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்கு நிலுவையில் இருக்கே.. அதுக்கு எப்போ ஆக்ஷன் எடுப்பீங்க நாசர் சார்? வேணும்னா சொல்லுங்க அந்த பட்டியல நான் தரேன். டி.வி.ஏ.சி.,ஐ முடுக்கி விடுங்க என நக்கலாக கிண்டல் பதிவிட்டுள்ளார்.