ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வா? எதிர்ப்பு தெரிவித்ததையோட்டி நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி ஒத்திவைப்பா?..

இந்தியாவில் ஜவுளி பொருட்களின் விலை ஜிஎஸ்டி வரி விகிதம் 5 ல் இருந்து 12 சதவீதமாக உயர்ந்த நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டானது நமக்கு அமைந்திருக்கிறது.

ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வா? எதிர்ப்பு தெரிவித்ததையோட்டி நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி ஒத்திவைப்பா?..

இந்தியாவில் ஜவுளி பொருட்களின் விலை ஜிஎஸ்டி வரி விகிதம் 5 ல் இருந்து 12 சதவீதமாக உயர்ந்த நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டானது நமக்கு அமைந்திருக்கிறது.இதற்கு தமிழகமட்டுமில்லமால் ஒரு சில மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

ஜிஎஸ்டி உயர்வு காரணமாக உற்பத்தி பாதிப்பு, உள்ளிட்ட கடும் பாதிப்புகள் ஏற்படும் எனவும், பருத்தி நூல் ஆகியவற்றின் மூலப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் ஈரோடு திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


 ஜிஎஸ்டி வரி உயர்வை குறைக்க வேண்டும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையடுத்து இது தொடர்பாக மத்திய அரசிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையில் 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற நிதியமைச்சர் டிடிஆர் தியாகராஜன் ஜவுளிப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்

வரி உயர்வு வாபஸ் தமிழகத்தைப் போலவே பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்தனர் இந்நிலையில் 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதைப்போல ஆயிரம் ரூபாய்க்கு மேலான விலை மதிப்புடைய கால நிகழ்கால ஜிஎஸ்டி வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ஜவுளி துறையினர் நன்றி கடுமையான வாதங்களை முன்வைத்து ஜிஎஸ்டி வரி உயர்வு உத்தரவை நிறுத்திவைக்க உதவிய தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நீண்ட காலமாக கடும் பின்னடைவை சந்தித்து வந்த ஜவுளித்துறை மீண்டும் புத்துயிர் பெரும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

5 மாநில தேர்தல் 2022ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டபேரவை நடைபெற உள்ள நிலையில் பல்வேறு முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல் விலை குறைப்பு வேளாண் சட்டங்கள் வாபஸ் வரிசையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை எடுப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்