அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவாரா? சீமான் கேள்வி!

அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவாரா? சீமான் கேள்வி!

திமுக ஊழல் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவின் பட்டியலை வெளியிடுவாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை  விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் , ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், அங்கு நாம் தமிழர் சார்பில் இஸ்லாமிய தங்கை ஒருவரை போட்டியிட வைப்பதாகவும்,  தாமரையுடன் உதயசூரியன் நேரடியாக போட்டியிட்டால் தான் ஆதரிப்பதாகவும் கூறினார்.

இதையும் படிக்க : உ. பி சாமியாரால் அமைச்சர் உதயநிதி தலையை சீவ முடியுமா?

மேலும் சாதி, மதம் என்பது தமிழினத்திற்கு திட்டமிட்டு ஊட்டப்பட்ட ஒன்று எனவும், மொழி, இன பற்றை ஊட்டினால் தான் சாதி, மதத்தை ஒழிக்க முடியும் எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஊழல் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவின் பட்டியலை வெளியிடுவாரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.