தொடர் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்......நீரில் முழ்கிய குற்றியார் தரைமட்ட பாலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக  ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால்  குற்றியாறு தரைமட்ட பாலம் நீரில்  மூழ்கியது.

தொடர் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்......நீரில் முழ்கிய குற்றியார் தரைமட்ட பாலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக  ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால்  குற்றியாறு தரைமட்ட பாலம் நீரில்  மூழ்கியது. இதனால்  சுமார் 6 மணி நேரமாக ஆற்றை கடக்க முடியாமல்  மலைவாழ் மக்கள் பேருந்தில் காந்திருக்கு சூழல் உருவானது.

அடிக்கடி பெய்துவரும் கனமழையால் இந்தப் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவது வாடிக்கையாகி வருகிறது.  இதனால் குற்றியார் மோதிரமலை மாங்கா மலை விளாமலை முடவன் பொற்றை உட்பட 12 கிராம மலைவாழ் மக்கள் போக்குவரத்துக்கு சிரமப்படுகின்றனர்.

இதேபோன்று குற்றியார் கல்லார் கிழவியார் ஆகிய பகுதியில் உள்ள அரசு ரப்பர் குடியிருப்பு வசிக்கும் மக்களும் பாதிக்கும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. குற்றியாறு தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக்க வேண்டுமென அப்பகுதி மலைவாழ்மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.