வடகிழக்கு பருவமழையால் இருந்து பரவலாக மழை... 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்...

கனமழை காரணமாக கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை உட்பட 10 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் இருந்து பரவலாக மழை... 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.