" கர்நாடகா முதலமைச்சர் யார்..? இன்று இரவு அறிவிப்பு வெளியாகும் என தகவல்....!

" கர்நாடகா முதலமைச்சர் யார்..?    இன்று இரவு   அறிவிப்பு வெளியாகும் என தகவல்....!

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10- ம் தேதி நடைபெற்று பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த முதல்வர் யார் என எதிர்பார்ப்புகள் எழுந்தவண்ணம்  இருக்கிறது. 

Poster war in Karnataka between Shivakumar and Siddaramaiah erupts after  Congress' big win - BusinessToday

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் இருவரில் யார் முதலமைச்சராவார்கள் என பெரிதளவில் கட்சியிலும், மக்களிடையேயும் எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கின்றன. இந்நிலையில் அடுத்த முதலமைச்சர் யார்..? என உறுதிசெய்யும் பொருட்டு ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், 

இன்று இரவுக்குள் கட்சித் தலைமை அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிக்கும் என முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி பி ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.  

இதையும் படிக்க    }  " மக்கள் மாற்றத்தை விரும்பி காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.." - அண்ணாமலை.

நேற்று இரவு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் மேல் மட்ட பொறுப்பாளர்கள் கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர் இன்று கட்சி தலைமைக்கு மேல்மட்ட பொறுப்பாளர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு இன்று இரவுக்குள் அடுத்த முதல்வர் குறித்து கட்சி மேலிடம் அறிவிக்கும் என்றும் முதல்வர் தேர்வில் கட்சியில் எந்த வேறுபாடும் கிடையாது இன்று சித்தராமையா டி கே சிவகுமார் ஆகிய இருவரும் டெல்லி செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க    }   கர்நாடக தேர்தலுக்கு பின் திடீர் திருப்பம்..! மல்லிகார்ஜுன கார்கே மீது அவதூறு வழக்கு...!