வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? அதிமுக-வில் புதிய சர்ச்சை!!

வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? அதிமுக-வில் புதிய சர்ச்சை!!

தமிழக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என்பது தொடர்பாக அக்கட்சியில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அதிமுக சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார் என்ற புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர்  ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்து இட்டு வந்தனர்.  தற்போது இந்த பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே அதிமுக சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.