ஐந்து புலிகளை வேட்டையாடிய சம்பவத்தின் பின்னணியில் யார்? உயர் நீதிமன்றம் கேள்வி !

ஐந்து புலிகளை வேட்டையாடிய சம்பவத்தின் பின்னணியில் யார்? உயர் நீதிமன்றம் கேள்வி !

சத்தியமங்கலத்தில் ஐந்து புலிகளை வேட்டையாடிய சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யாரென விசாரிக்கப்பட்டதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது தொடர்பான வழக்குகள்  நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. 

அப்போது, மனுதாரர்கள் தரப்பில், வட இந்தியாவைச் சேர்ந்த பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் புலி வேட்டையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், சத்தியமங்கலத்தில் 5 புலிகள்  வேட்டையாடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ஆறு பேருக்கு எதிரான புலன் விசாரணை முடிந்து விட்டதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது. புலி வேட்டை

இதில், அரசுத்தரப்பு விளக்கம் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், புலி வேட்டையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவற்றின் தோல், பல், நகங்கள் யாருக்கு விற்கப்பட்டன? இதில் சர்வதேச தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். புலிவேட்டை

இதற்கு அரசுத்தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படாததை அடுத்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் ஜூலை 5ம் தேதி ஆஜராகும்படி, புலன் விசாரணை அதிகாரிக்கும், வனக் குற்ற தடுப்புப் பிரிவு அதிகாரிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க:"திமுகவினரை சீண்டிப்பார்த்தால் தாங்க மாட்டீர்கள்" மு.க.ஸ்டாலின் விளாசல்!