கோடை வெயிலில் மக்களை குளிர்வித்த ஆலங்கட்டி மழை...!

கோடை வெயிலில் மக்களை குளிர்வித்த ஆலங்கட்டி மழை...!

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், சூறை காற்றுடன் கனமழை பெய்ததால், நூறாண்டு பழமையான அரசமரம் அடியோடு சாய்ந்தது. அதில், மரத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்படிருந்த கார் சேதமடைந்தது.சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், வீடுகளின் கதவு மற்றும் மேற்கூரைகள் காற்றில் பறந்ததால் பரபரப்பு நிலவியது. மேலும், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. மேலும் இடையர்பாளையம், கோவில்மேடு, டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

இதையும் படிக்க : கள்ளக்குறிச்சியை கள்ளச்சாராய மாவட்டமாக மாற்றியதே திமுகவின் இரண்டாண்டு சாதனை...!

இதேபோல், தென்காசியில் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சங்கரன் கோவில் அருகே மின்னல் தாக்கியதில் பால் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு சுற்றுவட்டாரப் பகுதியில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிச்சியடைந்தனர்.  சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.