திமுக இதற்கு முன் ஆட்சியில் இருந்த போது "நான் மிகவும் இளமையாக இருந்தேன்...காயத்ரி ரகுராம் 

திமுக இதற்கு முன் ஆட்சியில் இருந்த போது "நான் மிகவும் இளமையாக இருந்தேன்...காயத்ரி ரகுராம் 

திமுக ஆட்சி அமைத்தது முதல் கொரோனா தடுப்பு பணிகள் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிபெருபான்மை பெற்று ஆட்சியமைத்துள்ள திமுக குறித்து பல்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் விமர்சனங்கள், குற்றச்சாட்டு வைத்துக்கொண்டே உள்ளனர். அந்த வகையில் பாஜக கலை இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக ஆட்சி குறித்து விமர்சித்துள்ளார்.

திமுக இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தபோது எப்படி பொய் சொன்னார்கள் அல்லது ஊழல் செய்தார்கள் அல்லது திருடினார்கள் என்பதை புரிந்து கொள்ள நான் மிகவும் இளமையாக இருந்தேன். ஆனால் இன்று நான் அதை நேரலையில் பார்க்கிறேன். திமுகவுக்கு வாக்களித்த மக்கள் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று விமர்சித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு மட்டுமே தமிழகத்தில் வேலை வாய்ப்பு முன்னுரிமை கிடைக்கும் என்றால். பி.டி.ஆர் யோசனை படி இன்றைய முதல்வர்.. தமிழ்..? எங்கோ இடிக்குது. PTR வேற லெவல் ஐடியா..  நீங்க தான் எதிர்காலத்தில் திமுகவின் president என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சீண்டியுள்ளார்.

மேலும் இன்று இளைஞர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திற்கு சென்று, வளர்ச்சி இருக்கும் இடத்தில் வேலை வேண்டும் என்று சிந்திக்கிறார்கள் பெரும்பாலும் திராவிட உள்ளூர் அரசியல் காரணமாக..? 

பி.டி.ஆருக்கு தமிழ்நாட்டில் 10% பிற மொழி மக்கள் இங்கே வாழ்கிறார்கள் தெரியுமா? முதல்வரின் குடும்பமும் அவர்களில் ஒருவர். திமுக, சீரற்ற அறிக்கைகள் மற்றும் தவறான வாக்குறுதிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று அடுக்கடுக்காக திமுக குறித்து சரமாரியான விமர்சனங்களை காயத்ரி அள்ளி தெளித்து வருகிறார்.