ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? விவரம் உள்ளே!

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இன்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? விவரம் உள்ளே!

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இன்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் கோரியது. இதைத் தொடர்ந்து, கடந்த 6ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் பேசிய தமிழக தேர்தல் ஆணையர், பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் இருக்கும் விவரங்களை கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதியை இன்று மாலை 5 மணிக்கு தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவிக்கிறார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.