ரம்ஜானை முன்னிட்டு வார சந்தை.. ஆடுகள் விற்பனை மந்தம்.. விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் கவலை!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் நடந்த வார சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்ததால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் கவலை அடைந்தனர்.

ரம்ஜானை முன்னிட்டு வார சந்தை.. ஆடுகள் விற்பனை மந்தம்.. விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் கவலை!!

ரம்ஜானை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வார ஆட்டுச்சந்தை நடைபெற்றது

இந்த வாரச்சந்தைக்கு திருச்சி, திருநெல்வேலி, தேனி, கம்பம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மினிலாரிகளுடன்  ஆடுகள் வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர்.

ஆனால் குறைந்த விலைக்கே ஆடுகளை வாங்க வியாபாரிகள் விலை பேசினர். இதனால் ஆடுகள் விற்பனை படு மந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஆட்டு சந்தையில் சுமார் 3  கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆகும் என்றும் ஆனால் இந்த ஆண்டு 10 லட்சம் அளவுக்கு கூட விற்பனை நடைபெறவில்லை என்கின்றனர் விவசாயிகள்.