வா வாத்தியாரே நம்ம குணா கல்யாணத்துக்கு போயிட்டு வருவோம்: அழைத்து மகிழும் காய்ச்சல் கவின், குரங்கு ரத்தம் கோளாறு- வைரலாகும் பேனர்

நாமக்கல் மாவட்டம் அருகே நண்பரின் திருமணத்திற்கு இளைஞர்கள் வைத்த பேனர் சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

வா வாத்தியாரே நம்ம குணா கல்யாணத்துக்கு போயிட்டு வருவோம்: அழைத்து மகிழும் காய்ச்சல் கவின், குரங்கு ரத்தம் கோளாறு- வைரலாகும் பேனர்

சமீபத்தில் நடைபெறும் திருமணங்கள் அனைத்திற்கும் இளைஞர்கள் வைக்கும் பேனர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நாமக்கல் அடுத்துள்ள மோகனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கும் சுவேதா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணத்திற்கு அவரது நண்பர்கள் வைத்த பேனர் இன்று வைரலாகியது. அந்த பேனரில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள க பிலன் ரெங்கன் வாத்தியாருடன் சைக்கிளில் செல்வதும், வா வாத்தியாரே நம்ம குணா கல்யாணத்துக்கு போயிட்டு வருவோம்..!" என்ற வசனமும் டிக்டாக் பிரபலம் ஜி. பி.முத்துவின் பிரபலமான வசனமும் இடம்பெற்றிருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக பேனர் வைத்த நண்பர்களின் பெயர்கள் கொரோனா தொற்றின் அறிகுறிகளின் பெயர்களாக இடம்பெற்றிருந்தது பார்பவர்கள் அனைவரையும் நகைப்படைய வைத்தது. குறிப்பாக "பாசிட்டிவ் அஜித், காய்ச்சல் கவின், தும்மல் படையப்பா, நிலவேம்பு கிஷோர், சுடுதண்ணீர் மணி என பெயர்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. இவர்களது இந்த பேனர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.