ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்...2 தொழிலதிபர்கள் உட்பட 3 பேருக்கு வலைவீச்சு.!

தூத்துக்குடியில் ரூ 10.கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்...2 தொழிலதிபர்கள் உட்பட 3 பேருக்கு வலைவீச்சு.!

வெளிமாநிலங்களில் இருந்து செம்மரக்கட்டைகள் லாரி மூலம் கடத்தி வரப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி புதூர் பாண்டியா புறத்தில் உள்ள ஒரு லாரி செட் குடோனில் செம்மரக்கட்டைகள் இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்த இடத்திற்கு சென்ற போலீசார், லாரி செட் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு டாரஸ்  லாரியில் தார்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட போலீசார், அந்த லாரியை சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த லாரியில் ஏராளாமான சந்தனகட்டைகள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 20 டன் இருந்த செம்மர கட்டைகளை போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 10 கோடி என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவான இரண்டு தொழிலதிபர்கள் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.