வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம்... அமைச்சர் சாமிநாதன் பேட்டி...

வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம்" என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.

வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம்... அமைச்சர் சாமிநாதன் பேட்டி...

'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கக் கூடாது என்ற வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம்" என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்  காமராசர் அவர்களின் நினைவில்லத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,

"முதலமைச்சர் உத்தரவுப்படி காமராசர் வசித்த இல்லத்தில் அரசின் சார்பாக எடுக்கப்படும் பராமரிப்பு பணி குறித்து இன்று கேட்டறிந்தோம்.  காமராசர் நினைவு இல்லத்தை பராமரிக்க அரசு சார்பில் ஏற்கனவே 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரிடம் பேசி மேலும் கூடுதல் நிதியை  பெற உள்ளோம். காமராசர் இல்லத்தின் உள் பகுதி மேற்கூரைஙள் சிதைந்முள்ளன. அவற்றை சரி செய்து வர்ணம் பூச உள்ளோம். மழையிலும் சிதையா வண்ணம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். 

தமிழகம் முழுவதும் அமைந்துள்ள நினைவு இல்லங்களில் , துறை சார்பில் இரண்டொரு நாளில் உயர் அலுவலர்கள்  ஆய்வு செய்வர் , ஆய்வு செய்து புனரமைப்பு பணி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 

இங்கிருங்கும் காமராசர் தொடர்பான புகைப்படங்களை பொக்கிசங்கள். இப்புகைப்படங்களை புதுப்பிக்க உள்ளோம். சென்னையில் முத்துராமலிங்க தேவருக்கு ஏற்கனவே சிலை  அமைக்கப்பட்டுள்கது. சென்னையில் முத்துராமலிங்கம் அவர்களுக்கு நினைவில்லம் அமைப்பது  தொடர்பாக தேவையான இடத்தை ஆய்வு செய்து , நிதி நிலைக்கு ஏற்ப முடிவு செய்வோம்.

'ஜெய் பீம்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அந்த படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க கூடாது என வன்னியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இப்பட பிரச்சனை தொடர்பாக முதல்வருடன் கலந்துபேசி சுமூகமான சூழலை ஏற்படுத்துவோம். வன்னியர் சங்கத்தின் கோரிக்கை நியாயமாக இருந்தால் பரிசீலிப்போம், அதே வேளையில் திட்டமிட்டு சுமந்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்போம்" என்று கூறினார்.