நீர்நிலை ஆக்கிரமிப்பு - 3 குழுக்கள் அமைப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவை திருத்தி அமைத்து, மூன்று குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்பு - 3 குழுக்கள் அமைப்பு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை குழு அமைத்து மீட்க வேண்டும் என்றும், கண்காணிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க திருத்தப்பட்ட 3 குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  அதன்படி அந்த குழுவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.  

மேலும், நீர்வளத்துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். 
 
இந்த குழு நீர்நிலைகளை கண்காணிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீதிமன்ற உத்தரவுகளை கண்காணித்து மதிப்பாய்வு செய்வதோடு,மாதம் ஒருமுறை கூடி ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.