விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சி. வெ. கணேசன் திடீர் ஆய்வு ...!

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  அமைச்சர் சி. வெ. கணேசன் திடீர் ஆய்வு ...!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறைஅமைச்சர்சி.வெ. கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோட்டாட்சியர் லூர்துசாமி, வட்டாட்சியர் அந்தோணிராஜ், ஆகியோரிடம் வருவாய் பதிவேடு மற்றும், பட்டாமாற்றம், முதியோர் உதவித்தொகை, இலவச மனை பட்டா கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்கள் ஆகிய அரசுபதி வேட்டினை வாங்கி அதில் சரியாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், எத்தனை மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன என்றும்,  அதற்கான தீர்வுகள் என்னென்ன செய்யப்பட்டு இருக்கிறது, எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளன எனவும், அரசு பதிவேடுகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா, மேலும்  பதிவுகள் சரியாக இருக்கிறதா என்றும்  ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அனுப்பிய கடிதங்கள், அதற்கான தீர்வுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்பதையும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றபட்டிருக்கின்றனவா  என்றும் அதன்மூலம்  எத்தனை பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்பன போன்ற பல்வேறு திட்ட நல பணிகள் குறித்தும்  கேட்டு அறிந்தார். 

பின்பு அலுவலகத்தில் உள்ளே உள்ள அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு அலுவலகத்திற்கு தேவையான உபகரணங்கள் டேபிள், சேர் போன்றவை சரியாக இருக்கிறதா என்று பார்த்து தேவையான உபகரணங்களை கேட்டு பெற்றுக்கொள்ளுமாறு  வட்டாட்சியரிடம் கூறினார்.

பின்னர், அலுவலகத்தின் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த பொதுமக்களிடம் அவர்கள் கோரிக்கையை கேட்டறிந்தார். அதாவது, விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டிய நல்லூர் ஏரியில் உள்ள ஆக்ரமிப்பை உடனடியாக காவல்துறை பாதுகாப்புடன் அகற்றிட கோட்டாட்சியர் லூர்துசாமியிடம் உத்திரவிட்டார்.

இதையும் படிக்க      }    உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்...! ஸ்டாலினுக்கு,.... பொள்ளாச்சி ஜெயராமன் பதில்..!

மேலும் பொதுமக்களின் இரண்டாவது கோரிக்கையான ஏரியில் வரும் பத்தாண்டுகளுக்கு ஆதிதிராவிடர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர மாவட்டஆட்சியரிடம் கூறி நடைமுறைகளை பின்பற்றி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரியநடவடிக்கை எடுப்பதாகவும் கூறி மனுவை பெற்றுக்கொண்டார்.

இதையும் படிக்க      }  டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் தடை - வழக்கு - நீதிமன்றம் தள்ளுபடி