விருத்தாச்சலம் பாலக்கரையில் குடிநீர் வழங்காதது, அடிப்படை வசதி வழங்காதது குறித்து கண்டன ஆர்ப்பாட்டம்...!

விருத்தாச்சலம்  பாலக்கரையில் குடிநீர் வழங்காதது,  அடிப்படை வசதி வழங்காதது குறித்து கண்டன ஆர்ப்பாட்டம்...!

*விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கர்மாங்குடி ஊராட்சியில் இரண்டுஆண்டுகளாக குடிநீர்வழங்காதது உள்படஅடிப்படைவசதிகளை  மேம்படுத்திடாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
-------------------------------
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்
கர்மாங்குடி ஊராட்சியில் வார்டு எண் 2ல்,  சந்துதெரு  பொதுமக்களுக்கு,  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்காததை கண்டித்தும்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்ற நோயாளிகளுக்கும் அங்குள்ள பொதுமக்களுக்கும் தேவையான அளவு குடிநீர் வழங்காததை கண்டித்தும்,ஆதிதிராவிடர் குடியிருப்பில் இருந்து ஓடைக்குச் செல்லும்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், 
கார்மாங்குடி காப்புகாட்டிற்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான சாலை அமைத்துதர வேண்டியும், கார்மாங்குடி ஊராட்சியில் உள்ள மூன்று மினி குடிநீர்  டேங்க்குகள்  பழுது அடைந்ததாக கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அதனைச் சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் எனவும், சத்தியவாடி ஊராட்சியில் சுடுகாட்டு பாதைக்குச்  செல்லும் ஓடையில் பாலம் கட்டிதர வேண்டும் போன்ற பல  கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

வட்டசெயலாளர் ராவணராஜன் தலைமையில், நகரச்செயலாளர் விஜயாபாண்டியன், பாலமுருகன், ரவி, மணிகண்டன், கலைவாணி, இளந்தென்றல், ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க:.. பூர்விக சொத்துக்கள் குறித்து மறுபரிசீலனை செய்க.... ! ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டம்...! - https://www.malaimurasu.com/posts/tamilnadu/Ranipettai-people-strike