படவாய்ப்பு கொடுத்த AVM வாசலிலேயே இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குநர்...!!

மாநகர காவல்,பொண்ணு பார்க்கப்போறேன், வெற்றி மேல் வெற்றி முதலிய படங்களை இயக்கிய எம்.தியாகராஜன் எவிஎம் ஸ்டூடியோ எதிரே இறந்து கிடந்த சோகம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படவாய்ப்பு கொடுத்த AVM வாசலிலேயே இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குநர்...!!

அருப்புக்கோட்டையை சேர்ந்த இயக்குனர் எம். தியாகராஜன், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சினிமா இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டி.எஃப்.டி படித்து சினிமா இயக்குனரானார். வெற்றி மேல் வெற்றி, மாநகரக் காவல் ஆகிய வெற்றிப் படங்களையும் இயக்கினார்.அதற்கு பிறகு பெரிய பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு எதிரே உள்ள ப்ளாட்பாரத்தில் எம்.தியாகராஜன் இறந்தநிலையில் கிடந்துள்ளார். அவரது உடலை ‛மாநகர காவல்' துறையினர் எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

ஏ.வி.எம் நிறுவனத்தின் 150-ஆவது படத்தை இயக்கிய இயக்குநர் ஒருவர், அந்த ஸ்டூடியோவிற்கு எதிரிலேயே இறந்து கிடந்தது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.