பெட்ரோல், டீசல் விலை உயர்வால் "காய்கறி வரத்து குறைவு".. மூன்றாவது நாளாக காய்கறிகளின் விலை அதிகரிப்பு!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று மூன்றாவது நாளாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது மக்களை கவலை அடைய செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் "காய்கறி வரத்து குறைவு".. மூன்றாவது நாளாக காய்கறிகளின் விலை அதிகரிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் விலை அதிகரித்துள்ளது. கடந்த 30-ம் தேதி 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் 7 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது 30 முதல் 35 ரூபாய்க்கும், கத்தரிக்காய், பீர்க்கங்காய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறி விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் 10 ரூபாய் உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் விலை அதிகரிப்பு பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.