காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு... சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் விமர்சனம்!!

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் மீது திமுக உறுப்பினர்களுக்கும், பாஜ.க உறுப்பினர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

சட்டப்பேரவையில் பேசிய பாஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற பிரச்சனைகள் எழவில்லை என்றார். தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுக, கர்நாடக காங்கிரஸ் அரசை விடுத்து, மத்திய பாஜ.க. அரசை மட்டும் குறைகூறி வருவதாக குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில்  திமுக அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டு உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

அப்போது குறிக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, காவிரி நிலைப்பாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என யாருக்கும் இரட்டை நிலைப்பாடு இல்லை என்றார். மேலும், மத்திய அரசிடம் பேசி தண்ணீர் பெற்றுத் தருவேன் என உங்களால் கூற முடியுமா என வானதி சீனிவாசனிடம் சபாநாயகர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு என குறிப்பிடப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.