"சி.ஆர்.பி.எஃப் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு" வைகோ கண்டனம்...!!

"சி.ஆர்.பி.எஃப் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு" வைகோ கண்டனம்...!!

சி.ஆர்.பி.எஃப் எழுத்து தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு  மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எஃப் ( Central Reserve Police Force- CRPF) துணை ஆய்வாளர்(Central Reserve Police Force- CRPF) மற்றும் தலைமைக் காவலர்(  Head Constable) பணியிடங்களைத் தேர்வு செய்ய கடந்த 8 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இவ்வறிவிப்பில்  ஜூலை மாதம் இணைய வழியில் எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எழுத்துத் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.CRPF Recruitment 2023: Registration begins today for 9,212 constable posts  on crpf.gov.in - Times of India

இந்நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சி.ஆர்.பி.எஃப் எனப்படும் துணை இராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்  மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது எனக் கூறியுள்ள அவர் அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை இராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத்தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

CRPF Recruitment 2023 1458 HC (Min) & ASI (Steno) Posts

இதையும் படிக்க:வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்...!!