சுவாமிமலை சுவாமிநாத ஆலயத்தில் வைகாசி விசாகம்.. 108 வலம்புரி சங்குகளுடன் சிறப்பு அபிஷேகங்கள்!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைகாசி விசாகமான இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது.

சுவாமிமலை சுவாமிநாத ஆலயத்தில் வைகாசி விசாகம்.. 108 வலம்புரி சங்குகளுடன் சிறப்பு அபிஷேகங்கள்!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாத ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முருகருக்கு 108 வலம்புரி சங்குகளுடன் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள முருகன் கோயிலில் நான்கு வருடங்களுக்கு பிறகு வெகு விமிர்சையாக  தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

இதேப்போல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள திருராமேஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த ராமநாதசுவாமி கோயிலிலும் தேரோட்டம் வெகு விமர்சையான நடைபெற்றது. இதில்  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலையில் கடந்த நான்காம் தேதி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது,. அப்போது வெங்கடாஜலபதி தம்பதி சமேதராய் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.