வைகாசி விசாகத் திருநாள்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்!

நாளை வைகாசி விசாகத் திருநாளையொட்டி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  

வைகாசி விசாகத் திருநாள்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்!

முருகப் பெருமான் அவதரித்த வைகாசி விசாக திருநாளையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்படுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.  

திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 600 காவலர்கள் கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் என காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  கோவில் கடல் பக்தர் பாதுகாப்பு குழு சார்பில் கடலில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தமுறை பக்தர்கள் சர்ப்பக் காவடி எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.