ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்...! - லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் அறிவிப்பு.

ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வலியுறுத்தி  உண்ணாவிரத போராட்டம்...! -  லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் அறிவிப்பு.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மாநில செயற்குழுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு லாரி உரிமையாளர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். கூட்டத்திற்கு பின்னர் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், "ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால், தங்களுக்கு அபராதம் ஏன் விதித்தார்கள், எவ்வளவு விதித்தார்கள் என்பது தெரிவதில்லை. பல நேரங்களில் எங்களுடைய லாரிகள் நிறுத்தி வைத்திருக்கும்போதும் அபராதம் விதிக்கப்படுகிறது மற்றும், லாரி லோடு கொண்டு செல்லும் போதும் அபராதம் விதிக்கப்படுகிறது" எனவும்,இதனால், மாவட்டம் தோறும் லாரி உரிமையாளர்கள் தங்களுடைய சம்மேளனம் சார்பில் இதுதொடர்பாக மனுக்கள் அளித்துள்ளதாகவும் கூறினார். 

மேலும், மனுக்கள் அளித்தும் இப்பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்றும், எனவே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்களையும் ஒன்றிணைத்து ஒரு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்லகாகவும் தெரிவித்தார். மேலும்,  அதற்கான தேதி  முடிவு செய்த பின்பு தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

அதேபோல் "லாரிகளில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு அதிகமாக பழு இருந்தால் அதற்கு உரிய அபராதத்தை நாங்கள் கட்டுவதற்கு தயார். ஆனால் சாலை போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காததால், அந்த கோபத்தில் லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக உள்ள லோடுகளை இறக்க மறுப்பதாக கூறி 40ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். எனவே மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தில் உள்ள 194 என்ற சரத்தை நீக்க வேண்டும்", எனவும்,
 
இதையும் படிக்க    ]  திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்... தமிழ்நாடு முழுவதும் நடைபெரும் - தலைமை செயலகம்.

அதேபோல் அண்டை மாநிலங்களில் டீசல் விலைகள் ரூ.8,9 என குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பெட்ரோல் விலையை மட்டும் தமிழக முதல்வர் குறைத்திருந்தார். எனவே டீசல் விலையையும் தமிழக முதல்வர் குறைத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க    ]  " திராவிட மாடல் ஆட்சி எங்களுக்கு தேவையில்லை..! "