நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது...உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருப்பதால் தற்போதைய சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது...உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் என்பவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  

அதில், தற்போதைய சூழலில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என குறிப்பிட்டிருந்தார். 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் நிலையில், தேர்தல் தொடர்பாக எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.  

தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை  ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை மறுதினம் மனுவை விசாரிப்பதாக தெரிவித்தனர்.