புதுச்சேரியில் ’ தியாகிகள் தின’ த்தை முன்னிட்டு தொழிற்சங்கத்தினர் மரியாதை....!

புதுச்சேரியில்   ’ தியாகிகள் தின’ த்தை முன்னிட்டு தொழிற்சங்கத்தினர்  மரியாதை....!

தியாகிகள் தினத்தை ஒட்டி புதுச்சேரியில் உள்ள நினைவிடத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

கடந்த 1936 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அன்று 8 மணி நேர வேலை கேட்டு புதுச்சேரியில் பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பிரெஞ்சு ராணுவத்தினர்  துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மேலும் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக 8 மணி நேர வேலையும் உரிமையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கண்டத்திலேயே முதல் முதலில் புதுச்சேரி மண்ணில் தான் 8 மணி நேர வேலை செய்யும் உரிமை வழங்கப்பட்டது.

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மற்றும்  சம வேலைக்கு சம ஊதியம் பெறப்பட்ட இந்த தினம் தியாகிகள் தினமாக தொழிற்சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஜூலை 30 தியாகிகள் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவிடம் அலங்கரித்து வைக்கப்பட்டது. ஏஜடியூசி தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக வந்து தியாகங்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மற்றும் பஞ்சாலை ஊழியர்கள் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிக்க   |  ”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சாவு மணி அடிப்பதற்கே அண்ணாமலை யாத்திரையை தொடங்கியுள்ளார்” - EVKS இளங்கோவன்