தமிழகம் முழுவதும் இன்று யூபிஎஸ்சி முதல்நிலை தேர்வு..

யூபிஎஸ்சி முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.  

தமிழகம் முழுவதும் இன்று யூபிஎஸ்சி முதல்நிலை தேர்வு..

இந்திய குடிமை பணிகளுக்கான 712 காலி பணியிடங்களை, மத்திய குடிமை பணிகள் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 72 மையங்களில் 28,424 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் காலை 8.20 மணிக்குள்ளும், மதியம் 1.20 மணிக்குள்ளும் தேர்வு வளாகத்திற்குள் வர வேண்டும். தாமதமாக வந்தால் உள்ளே மனுமதிக்கப்படமாட்டார்கள். காலை 9.20 மணிக்கும் மதியம் 2.20 மணிக்கும் தேர்வு வளாகத்தின் நுழைவு வாயில் மூடப்படும். 

தேர்வு எழுதுபவர்கள் செல்போன், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்டவைகளை கொண்டு வர கூடாது. ஹால் டிக்கெட், ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள அட்டை மற்றும் கருப்பு மை பந்துமுனை பேனா மட்டுமே தேர்வு அறைக்குள் கொண்டுவர வேண்டும். இதற்காக காலையில் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னையில், மாவட்ட வருவாய் அதிகாரியும், மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியரும் தேர்வு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.