நாமக்கல் அருகே இரு மகள்கள் திடீர் மாயம்....! மீட்டுத் தருமாறு பெற்றோர் மனு...!

நாமக்கல் அருகே இரு மகள்கள் திடீர் மாயம்....!  மீட்டுத் தருமாறு பெற்றோர் மனு...!

நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சி போயர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான கேசவன். இவர் கேரள மாநிலத்தில் மண்வெட்டும் வேலை செய்து வருகிறார். தற்போது அங்கு மழைக்காலம் என்பதால் நாமக்கல்லில் உள்ள தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன்  வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி(18), கீர்த்திகா (15) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி கேசவன், இவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர், மாலையில்  வீடு திரும்பிய செல்வி, வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி, கீர்த்திகா ஆகிய இருவரும் காணாமல் போனதாய் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தனது கணவர்  மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியும் அவர்களை காணவில்லை. 

இதையடுத்து, பல இடங்களில் தேடியும் இரு மகள்களும் கிடைக்காததால் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.  அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். 

இதையும் படிக்க    | சிங்கப்பூர் - மதுரை இடையே கூடுதல் விமானம் வேண்டும்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

இவ்வாறிருக்க,  9 நாட்கள் ஆகியும் இரு மகள்களும் கிடைக்காததால் இன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனை சந்தித்து மனு அளித்தனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க    | ”பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு...ஜப்பானுக்கு வந்தது நீங்கள்தான்”