மழை வேண்டி விவசாய சங்கத்தின் சார்பாக மும்மத இறை வழிபாடு!

மழை வேண்டி விவசாய சங்கத்தின் சார்பாக மும்மத இறை வழிபாடு!

முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை வேண்டி விவசாய சங்கத்தினர் மூன்று மதங்களையும் சேர்ந்த இறை வழிபாட்டினை நடத்தினார்கள்.

தமிழ்நாடு -கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து வெளியேறும் நீர் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய பாசனநீர் ஆதாரமாகவும் உள்ளது.

இந்த அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதலாம் போக விவசாய பாசனத்திற்காக  தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விவசாயிகளும் நாற்றாங்கள் பாவும் பணியினை தொடங்கினார்கள். இந்நிலையில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை காலமாக இருந்தும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் உரிய நேரத்தில் மழை பொழிவு இல்லாமல் காலம் தாழ்த்துவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்பொழுது 116.30 அடியாக சரிந்துள்ளது.

இந்நிலையில், முதலாம் போக விவசாய பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், முல்லைப் பெரியாறு நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்கம் சார்பாக மூன்று மதத்தை சேர்ந்த குருமார்களின் முன்னிலையில் தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மழை வேண்டி இறைவழிபாடு செய்து புனித நீரினை அணையில் தெளித்து மலர்கள் தூவி மழை வளம் வேண்டி இறை வழிபாடுகளை நடத்தினார்கள்.

இதையும் படிக்க:வரிச்சூர் செல்வத்தை காவலில் எடுக்க மனு! விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!