திருச்சி: முக்கொம்பு காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் வெள்ளத்தில் குளிக்கும் மக்கள்!!

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் வெள்ள நீரில் குளித்து வருகின்றனர்.

திருச்சி: முக்கொம்பு காவிரி ஆற்றில் ஆபத்தை உணராமல் வெள்ளத்தில் குளிக்கும் மக்கள்!!

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு விநாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர்வரத்து வந்து கொண்டுள்ளது.

இங்கிருந்து காவிரியில் 21 ஆயிரத்து 400 கன அடியும், கொள்ளிடத்தில் 37 ஆயிரத்து 185 ஆயிரம் கனஅடி, அய்யன் வாய்க்காலில் 300 கன அடி, புள்ளம்பாடி பாசன வாய்க்காலில் 350 கன அடி, பெருவளை வாய்க்காலில்  275 கன அடி என தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனால் காவிரி, கொள்ளிட  கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்குமாறும் மக்கள் யாரும் ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்துமாறும் அந்தந்த பகுதி நிர்வாகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் முக்கொம்பு அணையை பராமரிக்கும் பொதுப்பணித்துறை இதனை கடைப்பிடிக்காததால் விடுமுறை நாளில் குவித்த சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் ஆற்று வெள்ளத்தில் குளித்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நேரும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.