அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம்...தட்டிகேட்ட ஓட்டுநரிடம் பள்ளி மாணவர்கள் ரகளை

வேலுரில் அரசு பேருந்தில் தொங்கியபடி அட்ராசிட்டி பயணம் செய்த பள்ளி மாணவர்களை தட்டி கேட்ட பேருந்து ஓட்டுநரிடம் ரகளையில் ஈடுபடும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம்...தட்டிகேட்ட ஓட்டுநரிடம் பள்ளி மாணவர்கள் ரகளை

வேலூர் அண்ணா சாலை பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராஜா தியேட்டர் ஸ்டாப், முஸ்லிம் ஸ்கூல் ரவுண்டான, தொரப்பாடி, வழியாக பாகாயம் செல்ல கூடிய நகரப்பேருந்தில்,  வேலூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் இருந்து பசுமாத்தூர், பொய்கை, விரிஞ்சிபுரம் உள்ளிட்ட கிராம பகுதியில் இருந்து ,,பள்ளிக்கு வரக்கூடிய  மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் புட்போர்டு அடித்தும் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணங்களை செய்து வருகிறனர்.


இந்த நிலையில், வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராஜா தியேட்டர் பேருந்துநிலையம் சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்துக்கு உள்ளே இடம் இருந்தும் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இதனைபார்த்த பேருந்து ஓட்டுனர் மாணவர்களை பேருந்தின் உள்ளே வரும்படி அறிவுரை கூறியுள்ளார். ஆனால், பள்ளி மாணவர்கள் உள்ளே செல்லாமல் ஓட்டுனரிடமே வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், கோபமடைந்த ஓட்டுநர் பேருந்தை சாலையின் நடுவே நிறுத்தி வைத்து மாணவர்களை கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.


இதற்கிடையில் மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுனருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த வேலூர் தெற்கு காவல்துறையினர்  ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.