முதல்வரை இடமாற்றம் இன்டர்ன்ஷிப்புக்கு கையெழுத்து - மாணவிகள் போராட்டம்

வணிகவியல் துறை மாணவிகள் இன்டென்ஷிப்புக்கு கையெழுத்திட மறுக்கும் முதல்வரின் செயல்பாட்டை கண்டித்தும், அவரை இடம் மாற்றம் செய்யக் கோரியும் 250க்கு மேற்பட்ட மாணவிகள் போராட்டம்.

முதல்வரை இடமாற்றம் இன்டர்ன்ஷிப்புக்கு கையெழுத்து - மாணவிகள் போராட்டம்

அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் 6500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் முதுகலை வணிகவியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் இன்டென்ஷிப்க்கு  முதல்வர் பால்கிரேஸ் அவர்களிடம் கையெழுத்து வாங்க நேற்று துறை தலைவர் நல்லசாமி கேட்டுள்ளார். ஆனால் முதல்வர் கையிழுத்திடாமல் துறைத் தலைவரை தரக்குறைவாக பேசி மாலை 6 மணி வரை யாருக்கும் கையெழுத்திடவில்லை. இந்த நிலையில் துறை தலைவர் நேற்று மாலை கல்லூரி வாயில் நின்று அழுது கொண்டே தான் பணி செய்த போதும் முதல்வர் தன்னை பழி வாங்குவதாக கூறி யிருந்தார்.

 

 மேலும் படிக்க | பாஜகவுடன் உறவை முடித்துக்கொள்கிறேன் - திருச்சி சூர்யா சிவா

தர்ணா போராட்டத்தில்

 இன்று கல்லூரிக்கு வந்த வணிகவியல் துறை மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்டர்ன்ஷிப்புக்கு உடனடியாக தங்களுக்கு கையெழுத்திட வேண்டும், துறை தலைவரை உள்ளிட்ட பேராசிரியர்களை தரக்குறைவாக பேசும் முதல்வரை இடமாற்றம் செய்யக் கோரி கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 மேலும் படிக்க | தொடரும் அம்பேத்கார் வழிபாடு சர்ச்சை... பட்டவர்த்தியில் 144 தடை

ஆத்திரத்தில் ஐடி கார்டு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன காவல் துறையினரும், வருவாய் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படாத நிலையில், அங்கு வந்த கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் இந்த மாணவிகள் இக்கல்லூரியில் படிக்க வில்லை எனவும், இவர்கள் யார் என்றே தெரியாது எனக் கூறினார். இதனை கேட்ட அங்கிருந்த மாணவிகள் ஆத்திரம் அடைந்து தங்களுடைய அடையாள அட்டை எடுத்துக்காட்டி தாங்கள் இந்த கல்லூரியில் தான் படித்து வருவதாகவும், முதல்வர் வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டு சொல்வதாகவும் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.