திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்று திம்பம் மலைப்பாதை.இங்கு  24 மணி நேரமும்  வாகன போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், வனவிலங்குகளைக் காக்கும் வகையில், இந்த சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

உயர்நீதிிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து  கர்நாடக தமிழக எல்லை பகுதி விவசாயிக்ள பொது மக்கள் மற்றும் லாரி  உரிமையாளர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  மேலும் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது..

இந்த  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கும் உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

மேலும் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை  அமல்படுத்த மட்டுமே உத்தரவிட்டுள்ளதாகவும்.. சரணாலய கிராமங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது புலிகள் சரணாலயம் இல்லை  என அறிவிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.