ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கோடை வெயிலை தணிக்க  ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை  அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தலம் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

ஆனால் கடந்த 18 ஆம் தேதி முதல்  ஒகேனக்கல்லுக்கு 45 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

நீர்வரத்து குறைந்ததால் பரிசலில் செல்லவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஒகேனக்கல்லில் காலை முதலே குவிய தொடங்கினர். பரிசலில் சவாரி செய்தும் அருவியில் குறித்தும்  அவர்கள் உற்சாகமடைந்தனர்.