மூன்று நாட்களுக்கு மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்... வெறிச்சோடிய கன்னியாகுமரி... 

2021-ம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மூன்று நாட்களுக்கு மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்... வெறிச்சோடிய கன்னியாகுமரி... 

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திரிவேணி சங்கமம் கடற்கரை ஆகியவை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் 2021-ம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை கன்னியாகுமரியில் காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே சமயம் கன்னியாகுமரி சென்ற சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள், அங்குள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் அங்கு அதிக கூட்டம் காணப்பட்டது.