நாளை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் பணிகள் தீவிரம்!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வாக்குபதிவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

நாளை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்து செல்லும் பணிகள்  தீவிரம்!!

தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு  நாளை வாக்குப்பதிவு  நடைபெறுகிறது.  சென்னை மாநகராட்சியின்  200 வார்டுகளில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமராக நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பெட்டிகளை  எடுத்து செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 171 வார்டுகளில், 347 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 924 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் வாக்கு சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் துரிதப்பட்டுள்ளது. திருச்சியை பொறுத்தவரை மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி, என 401 பதவிகளுக்கு 926 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.