திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டம் தொடங்கியது...!

திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டம் தொடங்கியது...!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் முருகப்பெருமான் காலையில் தங்கப் பல்லக்கிலும் மாலையில் பல்வேறு வாகனங்களிலும் ரத வீதிகளில் வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5 ஆம் தேதி பங்குனி உத்திரமும், 7 ஆம் தேதி பட்டாபிஷேகமும் 8 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.  

இதையும் படிக்க : ’தமிழ்நாடு வளர்ச்சியடைந்தால் இந்தியா வளர்ச்சியடையும்’ - பிரதமர் நரேந்திர மோடி

தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான மகா திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 5 அடுக்கு தேரானது வண்ணமயமான அலங்கார துணியைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வாசலில் நிறுத்தப்பட்டது.  தேரோட்டத்திற்கு முன்னதாக அதிகாலை உற்சவர் சன்னதியிலிருந்து தெய்வானையம்மனுடன் புறப்பட்ட சுப்பிரமணியசுவாமி கருப்பசாமி கோயிலில் பூஜை நடத்தியதை தொடர்ந்து மகா தேரில் எழுந்தருளினார். 

இதனையடுத்து அங்கு திரளாக கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கங்களுடன் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர்.