திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் லட்சத்தில் சேர்ந்த உண்டியல் காணிக்கை..!

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில்  லட்சத்தில்  சேர்ந்த  உண்டியல் காணிக்கை..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி மாதம் காணிக்கையாக 26 லட்சத்து 79 ஆயிரம் கிடைக்கப் பெற்றது.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று வைகாசி மாதத்திற்கான கோவில் உண்டியல் திறந்து இன்று எண்ணப்பட்டதில் ரூபாய் 26 லட்சத்து 79 ஆயிரத்து 122 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 183 கிராம், வெள்ளி 1 கிலோ 940 கிராமும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்., இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான உண்டியல் காணிக்கையானது இன்று காலை கோவில் துணை ஆணையர் முன்னிலையில் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ-26 லட்சத்து, 79 ஆயிரத்து 122 ரூபாயும், தங்கம் 183-கிராமும், வெள்ளி 1 கிலோ 940 கிராமும் இருந்தது.

இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில்., ஸ்ரீஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள்., பொதுமக்கள் ஆகியோர் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிக்க    | "சுங்க கட்டணத்தை ரத்து செய்தால் விலைவாசி குறையும்" - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா.