''சனாதனம் குறித்து பேசியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'' - ஹெச்.ராஜா

''சனாதனம் குறித்து பேசியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'' -   ஹெச்.ராஜா

சனாதனம் குறித்து பேசியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டனை பெறுவார்கள் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் எஸ்.சி மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியினை முறையாக பயன்படுத்தாத திமுக அரசை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் அதன் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது  பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:-

” மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் எஸ்.சி மக்களுக்கு 1 லட்சத்தி 12 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழக அரசிற்கு 16 ஆயிரத்தி 442 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் வெறுமென 5976 கோடி ரூபாய் மட்டும் செலவு செய்ததுடன் திமுக அரசு எஸ்.சி மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய தொகையில் 10 ஆயிரத்தி 466 கோடியை வேறு திட்டங்களுக்கு செலவு செய்திருக்கலாம் அல்லது செலவு செய்யாமலிருக்கலாம். இதற்கு கண்டனம் தெரிவித்தே இந்த பிச்சை எடுக்கும் போராட்டம் என்றார். பின்னர்,  சனாதானம் குறித்து பேசியதற்கு காங்கிரஸ் கூட்டனியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் சனாதானம் குறித்து பேசியவர்கள் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து பேசிய கருத்திற்கு,.. 

” திருக்குறள் குறித்து முழுமையாக அறியாமல் பேசியுள்ளார் என்றும் கவிஞர் வைரமுத்து அதிகமாக பேசாமலிருந்தால் மானமாவது மிச்சமிருக்கும் என்றும் அதிகம் பேசினால் மானம் போய்விடும்”, என்றும் பேசினார். மேலும் முட்டாள்களின் டுவிட்டருக்கு நான் பதில் சொல்ல தேவையில்லை”, என்றும் பதிலளித்தார்.

பின்னர், சாமியாரின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு

“ அமைச்சர் உதயநிதியின் படம் உ.பி சாமியாருக்கு எப்படி கிடைத்தது என்றும் இந்த குற்றச்சாட்டை உருவாக்குவதற்காகவே பொய்யாக இந்த சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்கள் என பேசியதுடன் டி.ஆர்.பாலுவின் கருத்து குறித்த கேள்விக்கு பாரதம் என்பதே இந்தியாவின் பெயர். இந்தியா என்கிற பெயர் வெள்ளையர்கள் வைத்ததே. பாரதம் என பெயர் மாற்றுவதி எந்த சிக்கல்களும் இல்லை. டி.ஆர்.பாலுவிற்கு கருப்பு பணத்தை மாற்றுவதில்தான் சிக்கல் உள்ளது”,  எனக் கூறினார்.

உ.பி.யில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு:-

அமைச்சர் உதயநிதி மீது தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கவுள்ளோம் என்றும் சென்னையில் ஆனையர் அலுவலகத்தில் தானே சென்று புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பேட்டியின் போது கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதையும் படிக்க   | உதயநிதிக்கு ஆதாரங்களுடன் பதிலளியுங்கள் - பிரதமர் வலியுறுத்தல்?