கொரோனா காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்" - மா. சுப்பிரமணியன்.

கொரோனா காலங்களில் பணியாற்றியவர்களுக்கு  முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்" - மா. சுப்பிரமணியன்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை  சந்தித்தார். 

அவரிடம், கொரோனா காலங்களில் பணியாற்றிய செவிலியர்களுக்கான பணி மீண்டும் வழங்கப்படுமா?  என்று  கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர்,   "கொரோனா காலகட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த அனைவருக்கும் தகுதி அடிப்படையில் ஆங்காங்கே நிர்ணயிக்கப்பட்ட ஊதிய முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் வருங்காலங்களில் வேலைக்காக நடைபெறும் தேர்வுகளில் கொரோனா காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்",  என தெரிவித்தார். 

தொடர்ந்து,  கொரோனா தடுப்பு மருந்து கையிருப்பு உள்ளதா? என்று செய்தியாளர் எழுப்பிய  கேள்விக்கு,  போதுமான அளவு கையிருப்பு உள்ளதாகவும் கூடுதலாகவும் மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து,  மே மாதம் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது பரவி வரும் கொரோனா உயிருக்கு பாதிப்பில்லாத நிலையில் தான் இருக்கிறது. ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தி ஓய்வு எடுத்தால் குணமடைந்து விடலாம் என உலக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாக கூறினார். 

இதையும் படிக்க | மாஸ்க் -கு முக்கியம் பிகிலு.. ! கொரோனா கம்மிங் பேக் ......!

ஊத்தங்கரையில் நடைபெற்ற ஆணவக் கொலை சம்பவத்தில் காயம் அடைந்த அனுசியா என்ற பெண்ணுக்கு தர்மபுரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்த செய்தியாளரின்  கேள்விக்கு, "பெண்ணுக்கு ஏற்பட்ட காயத்தின் அடிப்படையில், மற்றும் அந்த பெண்ணின் விருப்பத்தின் அடிப்படையில் தான் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்",  என தெரிவித்தார். 

நீட் தேர்விற்கான நிரந்தர தீர்வு எப்பொழுது என்ற கேள்விக்கு அது குடியரசுத் தலைவரின் கையிலும் மத்திய சுகாதாரத்துறை கையிலும் உள்ளது. என்று தெரிவித்தார். சேதமடைந்த கிராமப்புற அரசு சுகாதாரம் மையங்கள் சீரமைக்கப்படுமா ?என்ற கேள்விக்கு, "எங்கே சேதமடைந்துள்ளது என தெரிவித்தால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்', எனவும்  தெரிவித்தார்.