தியாகராஜர் கோவில் "ஆழித்தேரோட்டம்".. ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. விழாக்கோலமாக மாறிய திருவாரூர்!!

பிரசித்திபெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.

தியாகராஜர் கோவில் "ஆழித்தேரோட்டம்".. ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. விழாக்கோலமாக மாறிய திருவாரூர்!!

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவிலில் உள்ள ஆழித்தேரை வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. அலங்கரிக்கப்படாத இந்த தேரின் பீடத்தின் உயரம் 36 அடி, அகலம் 36 அடி. அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி என மொத்தம் 96 அடி உயரத்துடன் ஆழித்தேர் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஆழித்தேரோட்ட நிகழ்வு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பிரசித்திப்பெற்ற ஆழித்தேரோட்டத்தால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆழித்தேரோட்டத்தையொட்டி, திருவாரூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.