சென்னையில் இன்று இந்த தடுப்பூசி மட்டுமே போடப்படும்...

கோவிஷூல்டு தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால் சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது.

சென்னையில் இன்று இந்த தடுப்பூசி மட்டுமே போடப்படும்...

கோவிஷூல்டு தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால் சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது.

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களாக பெற்று ஒரு சில மாவட்டங்கள் அதுவும் குறிப்பாக சென்னை கோவை சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,  100% தடுப்பூசி போடும் பணியை நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது தற்போது வரையிலும் தமிழகத்தில் 2.53 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்  கோவிஷூல்டு தடுப்பூசி போதுமான அளவு கையிருப்பு இல்லாததால் சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. கோவிஷூல்டு தடுப்பூசி போடவில்லை.. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு தடுப்பூசி மையங்களிலும் கோவேக்சின் தடுப்பூசி ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு 50 தடுப்பூசிகளும், நேரடியாக செலுத்த 100 தடுப்பூசிகளும் போடப்படுகிறது