‘மாலை முரசு’ செய்திகளுக்கு நன்றி தெரிவித்த பொது மக்கள்!!!

திருவள்ளூர் பள்ளி ஒன்று சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதனை மாலை முரசு செய்திகள் செய்தியாக வெளியிட்டதை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், மக்கள் நன்றி கூறியுள்ளனர்.

‘மாலை முரசு’ செய்திகளுக்கு நன்றி தெரிவித்த பொது மக்கள்!!!

நமது மாலை முரசு தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே சிதிலமடைந்த நிலையில் இருந்த பள்ளிக் கட்டிடத்தை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டதற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவம் ஊராட்சியில் செயல்பட்டு வரும்  அரசு உயர் நிலைப்பள்ளியில் பல பகுதிகளை சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள்  கல்வி பயின்று வருகின்றனர். 

மிகவும் பழமை வாய்ந்த இந்த பள்ளியில், 50 மாணவர்கள் அமரும் வகையில் 2 வகுப்பறைகள்  மட்டுமே உள்ளன. மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருந்தது.   இந்த கட்டிடம் குறித்த செய்தி நமது மாலை முரசு தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பானது. 

செய்தி வெளியான 3 மணி நேரத்தில் சிதிலமடைந்த அந்த கட்டிடத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால், மாணவ - மாணவிகள், பெற்றோர் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தங்களின் நீண்ட நாள் கோரிக்கை மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாயிலாக நிறைவேறி உள்ளதாகவும் அவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதேபோல், மாலை முரசு செய்தி எதிரொலியாக மதுரை மாவட்டம் திருமலங்கம் அருகே விபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடனடியாக இடித்து அகற்றப்பட்டுள்ள நிகழ்வு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

முன்னதாக திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விரிசல் விட்டு சேதமடைந்து காணப்பட்டது. இது தொடர்பான செய்தி மாலை முரசு தொலைக்காட்சியில் வெளியான நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது. இதனால், ‘மாலை முரசு’ செய்திகளுக்கு, பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.