இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்...! திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி:...!

இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்...!  திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி:...!

இன்று  திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
அப்போது அவர் கூறுகையில்,.. "அம்பானி குடும்பத்தினர் 260-வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது எப்படி?  மோடியுடன் எங்கு சென்றார்?... எத்தனை ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது?...எனக்கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அந்த பேட்டியில் அந்த குடும்பத்தின்  நிதியுதவிக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்ஐசி போன்ற பொதுமக்களுடைய வரிப்பணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என யாரும் பதில் கூறவில்லை.  மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதுமே முடங்கி எந்த விவாதமும் நடக்கவில்லை. அவர்களுக்குச் சாதகமாக விவாதம் இன்றி காரியங்களை  நிறைவேற்றிக் கொண்டார்கள் எனவும் பேசினார்.
அதனையடுத்து, ராகுல் காந்தியின் பிரச்சனையில் சட்டப் பிரச்சனையை சட்டரீதியாக சந்திப்போம், ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட ஜனநாயக படுகொலையை சட்ட எதிர நடவடிக்கை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனக்கூறினார்.
அதுமட்டுமின்றி நாளை திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஈடுபட உள்ளது மேலும் காங்கிரசும் இந்த போராட்டத்தில் பங்குபெரும் எனக்கூறினார். வரும் வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இருபதாம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பாக இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, உண்ணாவிரதங்களும் நடைபெறும் என அறிவித்தார்.
. அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில் 7 ஆண்டுகளாக நிறைவுபெறாமல் இருந்த அரிஸ்டோ மேம்பாலம்  பணிகள் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளது. விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,.. திருச்சியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலினிடம் சென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை அதிகரிக்கும் வகையிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க 600 கோடியில் திருச்சியில் டைட்டில் பார்க் தொடங்கப்பட உள்ளது எனவும் அறிவித்தார். .

மேலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவானது, நிலையானது என தெரிவித்தார். இந்த பேட்டியின் பொழுது திருச்சி மாவட்ட தலைவர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் கலை போன்றவர்கள் உடனிருந்தனர்.

 இதையும் படிக்க;.. அம்பேத்கரை இழிவு படுத்துகிறார் ஆளுநர்...! சிந்தனைச்செல்வன்...! - https://www.malaimurasu.com/posts/tamilnadu/Governor-insults-Ambedkar-Thoughtful