மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்...! திருமாவளவன் வலியுறுத்தல்...!!

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்...! திருமாவளவன் வலியுறுத்தல்...!!

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று,மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தொழிலாளர் நலன்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தொழிற்சங்க தலைவர்களின் உணர்வுகளை மதித்தும், அரசியல் கட்சித் தலைவர்களின் உணர்வுகளை மதித்தும் முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். முதல்வரின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்று பாராட்டுகிறோம்" எனத் தெரிவித்தார்.

மேலும் "இந்திய ஒன்றிய அரசு தொழிலாளர் நலன் குறித்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக தொகுத்துள்ளன. அந்தத் சட்டத் தொகுப்பில் தொழிலாளர் நலன்களுக்கு எதிராக உள்ள பகுதிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுத வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:நிறுத்தி வைக்கப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா...! அடுத்தது என்ன...?