”கோயில்கள் முன்பு பெரியார் சிலை இருக்கக்கூடாது” - அண்ணாமலை

தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் தலை விரித்தாடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்தார். வேங்கைவயல் தீண்டாமை விவகாரம், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பட்டியல் சமூகத்தினர் மீதான தாக்குதல் என திமுக ஆட்சியில் சமூக அநீதி நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். 

இதையும் படிக்க : புதிய பயனாளிகளாக 7 லட்சம் பேர் தேர்வு - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் லஞ்சம் - ஊழல் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டிய அவர், திராவிட மாடல் அரசின் லஞ்சத்தால் சாமானிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக கூறினார். 

பெரியார் சமூக நீதிக்காக போராடியவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்ற அண்ணாமலை, பொது இடங்களில் பெரியார் சிலை இருக்கலாம், ஆனால் கோயில் முன் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.